நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்ப துன்னை,
என்றும் வணங்குவ துன்மலர்த் தாள், எழு தாமறையின்
ஒன்றும் அரும்பொருளே, அருளே உமையே இமயத்
தன்றும் பிறந்தவளே, அழியாமுத்தி ஆனந்தமே.
இமய மலையில் அவதரித்த தாயே
எழுதாமல் கேட்கப்படுகின்ற வேதங்களின் பொருளாய் இருப்பவளே
சிவபெருமானுக்கு அருளாய் இருப்பவளே
உமாதேவியே
என்றும் அழியாத முக்தியின் உறைவிடமாய் இருப்பவளே
உன்னை நான், நின்ற போதும் நடக்கும் போதும்
படுத்து இருக்கும் போதும்
உன் திருவடி தாமரையை தியானம் செய்து கொண்டிருக்கிறேன்.
