அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி 100 பாடல்களை கொண்டது
காப்பு, செய்யுளும் சேர்த்தால் 102 செய்யுள்கள் வரும்
இதை நாம் தெளிந்த மனதுடன் பாராயணம் செய்ய
நம் மனம் சந்தோஷமடையும் நம் சங்கடங்கள் யாவும் நீங்கும்
அழகு தமிழும் அழகுக்கு அழகான அம்பிகையின் உடல் செய்கை தீரம் போன்றவற்றை விவரிக்கும் போது
தமிழும் அழகுக்கு அழகாகிறது
அந்த அழகில் நாம் மனதை பறிகொடுத்த வண்ணம்
அந்தாதியின் காப்பு செய்யுளுக்கு செல்வோம்.
காப்பு
தாரமர் கொன்றையும், சண்பகமாலையும் சாத்தும்
தில்லை, ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே!
உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும்
என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே!
நிற்க கட்டுரையே.
மாலையாகப் பொருந்திய கொன்றையையும் சண்பகமலர் மாலையையும்
முறையே அணிந்தருளுகின்ற தில்லையெம்பெருமானுக்கும்,
அப்பெருமான் வாமபாகத்தில் உறைகின்ற உமாதேவியாருக்கும் திருக்குமரனே,
கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடைய கணபதியே,
ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையைப் பற்றிய அந்தாதி
எப்போதும் என் உள்ளத்துக்குள்ளே நிலைபெறும்படி திருவாய்மொழிந் தருளுவாயாக
