துவைதியையோ விசிஷ்டாத்வைதியையோ வருத்த முறச் செய்யாமல்
எளிதாக ஓர் இணைப்பு வழியைக் கண்டறிய முடியும்.
கடவுள் நம்முள் இருக்கிறார், எல்லாவற்றிலும் தெய்வீகம் உறைகிறது
என்ற கொள்கை இல்லாத ஒரு நெறிகூட இந்தியாவில் இல்லை.
தூய்மையும் பூரணத்துவமும் வலிமையும் எல்லாமே நம் ஆன்மாவில் முழுமையாக இருக்கிறது
என்பதை எல்லா வேதாந்த நெறிகளும் ஏற்றுக் கொள்கின்றன.
