சனி சிம்மத்தில் இருப்பின் உறவினர்களுடன் சண்டை சச்சரவு
கெட்ட செயலில் நாட்டம் மக்கள் நலம் திருப்திகரமாக இராது.
உத்தியோகம் செய்து பொருள் சேர்ப்பார்கள்.
சனி கன்னியில் இருப்பின் மற்றவர்களுக்காக தியாகம் புரிவர்,
ராணுவத்துறையில் பொறுப்பு வகிப்பர், பொருளாதார சுபிட்சம் சீராக அமையாது.
சனி துலாத்தில் இருப்பின் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பர்,
தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்,
வெளிநாடு செல்வர், தொழில் துறையில் அபிவிருத்தி காணலாம்.
