கும்பம்:- “கும்பத்ததோன் குன்நின்று வெல்வோன்” என்ற இந்த ராசி, கும்பம் அலங்கரித்தது போன்றதும் கோயில் கோபுர கலசம் போலவும் தோற்றம் தரும். இந்த ராசி கால புருஷனின் லாபஸ்தானம் என்னும் பெருமை பெற்றதாகும். இது 300 பாகை முதல் 330 பாகை வரை வான மண்டலத்தில் வியாபித்து உள்ளது. இதன் அதிபதி சனிஸ்வரன் ஆகும். ஒற்றை ராசி என்றும் ஆண் ராசி என்றும் வழங்கப்படும். ஸ்திர ராசியும் ஆகும் தென்முக ராசியில் 5 – வதாக வரும் இது காற்றுத் தன்மையுள்ள ராசி ஆகும். அதனால் இது உறுதியானது. துணிவு மிக்கது. கோபமூட்டுவதும் இயல்பான மனமிசைந்த காரியங்கள் செய்வதில் ஆற்றலும் மனோ சக்தியும் அதனால் ஆகக்கூடிய அனைத்து காரியங்களையும் திறம்பட முடிக்கும் ஆற்றல் பெற்றது. மிதமிஞ்சிய நிர்வாக பலமும் ஆற்றலில் தொய்வில்லாத தன்மையும் உடையது. இந்த ராசியில் எந்த கிரகமும் உச்சமோ, நீச்சமோ அடைவதில்லை. சூரியன், ராகு, கேது பகை சனியின் மூலத்திரிகோண வீடாகிய இது சந்திரன், செவ்வாய், புதன், குரு சமம் என்னும் அமைப்பையும் சுக்கிரன் நட்பு ஸ்தானத்தையும் அடைகிறார். முதல் 10 பாகையாகிய முதல் திரிகோணம் ஆண் தன்மை கொண்டது. கழுகு முகம் போன்ற உருவம். சனியின் உடையது. இரண்டாவது 10 பாகையாகிய இரண்டாவது திரிகோணம் பெண் தன்மை உடையது. குரூரமானது. அதிபதி புதன் மூன்றாவது 10 பாகையாகிய மூன்றாவது திரிகோணம் ஆண் தன்மை உடையது சுக்கிரனுடையது. 1 பாகை இரண்டு பர்லாங்கை குறிக்கும். சுரங்கங்கள், உலோகங்கள், நீர் தொட்டி முதலியவைகளை குறிக்கும். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaOctober 30, 2020Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகும்பம்கோள்களின் கோலாட்டம்சனி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் மகரம்:-NextNext post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் மீனம் :-Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 16June 30, 2026மேச, விருச்சிக லக்னம்:- நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 15June 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 14June 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 13June 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 12June 26, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026