மகரம்:- “மகரத்தோன் முதலைக் கண்ணீர் வடிப்போன்” என்ற இந்த ராசி பெண் தலையும் மீன் உருவமும் கொண்ட தோற்றத்தில் வானவெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த ராசி கால புருஷனின் கர்மஸ்தானமாகும். இது 270 பாகை முதல் 300 பாகை வரை வியாபித்துள்ளது. இதன்அதிபதி சனீஸ்வரன் ஆவார் இது பெண் ராசி ஆகும். சரராசியும் தென்முக ராசிகளில் நான்காவதாக இடம் வகிக்கும் இது அயன ரேகைக்குரிய ராசியும் ஆகும். மண் தன்மையுள்ள ராசியாதலால் லோகாதாய விருப்பம் செயலை எந்த விதத்திலேலும் தன் காரியத்தை சாதித்துக் கொள்ளல் அரை பயன் அளிக்கும் ராசி ஆகும். இன்ப வாழ்க்கையிலேயே கண்ணாய் இருப்பது தென் திசையை குறிப்பது பிரஷ்டோதய ராசி இரவில் சீற்றமும் வேகமும் உடையது. கால புருஷனின் முழங்கால் முட்டிகளை குறிப்பிடும் இடமாகும். தமோ குணத்தை உடையது. செவ்வாயின் உச்சவீடாகவும் குருவிற்கு நீச்ச வீடாகவும் சனி ஆட்சி வீடாகவும் அமையும். இந்த ராசி ராகு, கேது, சுக்கிரன் நட்பு வீடாகவும் சூரியனுக்கு பகையாகவும் சந்திரன் புதனுக்கு சம வீடாகவும் அமைகிறது. முதல் 10 பாகையாகிய முதல் திரிகோணம் ஆண் தன்மை உடையது நாற்கால் ஜீவன் சங்கிலியால் கோர்க்கப்பட்ட அமைப்பு கொண்டது. அதிபதி சனீஸ்வரன். இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம் — ஸ்திரீதிரேக்காணம் பெண்தன்மைவாய்ந்தது. சுக்கிரன் அதிபதி. மூன்றாவது பத்து பாகை புருஷ ஆயுததிரேக்காணம் அதிபதி.சந்திரன் 1பாகை, 2. மைலைக் குறிக்கும். தட்டுமுட்டு சாமான்கள் இட்டு வைக்கும் அறை, களஞ்சிய அறை, முள்ளான பிரதேசங்கள் ஆகியவற்றை குறிக்கும். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaOctober 29, 2020Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகோள்களின் கோலாட்டம்மகரம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் தனுசு:-NextNext post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் கும்பம்Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 16June 30, 2026மேச, விருச்சிக லக்னம்:- நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 15June 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 14June 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 13June 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 12June 26, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026