கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.
என்னை உன் அடியார்களில் ஒருவனாக சேர்த்து
சேர்த்த பின் உன் அருளால் என் இரு வினைகளை களைந்து
என் மீது அருள் புரிந்து வண்ண பொற்றாமரையில எழுந்தருளியுள்ள அபிராமி தேவியே
உன்னை தரிசித்த என் கண்ணும் மனமும் ஆனந்த வெள்ளத்தில் இருக்கிறது.
