விழிக்கே அருளுண்டு, அபிராம வல்லிக்கு. வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு, அவ்வழிகிடக்கப்
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.
வேதங்கள் கூறும் வழிபடி அபிராமி தாயே உன்னை வழிபட
வைராக்கியத்துடனும், அன்புடனும் கூடிய மனம் இருக்கிறது
இதனால் நின் கடை கண்களின் அருளினை பெரும் பாக்கியமும் இருக்கிறது
இவையெல்லாம் என்னிடம் இருக்கும் போது
வேத நெறி படி இல்லாமல் வீணாண காரியங்களை செய்து
பாழ் நரகில் வீழும் மதி கெட்டவர்களிடம்
எந்த தொடர்பையும் நான் வைத்துக் கொள்ள போவதில்லை.
