எனக்கு நேரம் இருந்திருந்தால், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைச்
சட்டங்களை வகுத்துத் தந்த நமது முன்னோர்கள் எப்படி பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார்கள்,
நமது தேசிய அமைப்புகளில் இதுவரை நிகழ்ந்துள்ள மாற்றங்களையும்
இனி வரப் போகின்ற மாற்றங்களையும் எப்படி
அன்றே உணர்ந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம்
மகிழ்ச்சியுடன் எடுத்துச் சொல்லியிருப்பேன்.
