தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே.
தேவி நின்னை துதித்து வணங்கி மின்னலை போல் சுடர் விடும்
நின் திருமேனி தோற்றத்தை ஒரு கணம் கூட இருத்தாதவர்
குலம், கோத்திரம், கல்வி, நல்ல குணம் இவையெல்லாம்
அடையாமல் ஒவ்வொரு நாளும் குடிசை தோறும்
பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பார்கள்.
