வல்லபம் ஒன்றறியேன் சிறியேன், நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன், பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே
கவலை ஏதுமில்லாமல் பசும்பொன் மலையாகிய மேருவை வில்லாக கொண்ட
சிவபெருமானுடன் இணைந்திருக்கும் தேவியே
எனக்கு அறிவாற்றல் எதுவுமில்லை
நின் திருவடியை தவிர வேறு எதன் மீதும் பற்று உடையவன் அல்ல
இந்த நிலையில் உள்ள நான் தொடுத்த நின்னை பற்றிய சொற்கள்
பொருள் இல்லாததாய் இருந்தாலும்
அவை உன்னுடைய திருநாமங்கள் ஆகிய தோத்திரமே!
