ககனமும் வானமும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி, நீ செய்த வல்லபமே.
அபிராமவல்லியே உன் வலிமையான செயலால்
ஈரேழு உலகங்களும் பார்க்கும் படி காமனது உடலை சிவ பெருமான் எரித்தார்.
அவருக்கு 6 முகங்களும் 12 கைகளும் உடைய குமரன்
அமைந்தது நின் வல்பத்தினால் அன்றோ.
