இரண்டாவதாக, கண்டனம் ஒருபோதும் நன்மை செய்வதற்கான வழியல்ல.
நம்முடைய சமூகத்தில் சில கேடுகள் இருக்கின்றன,
இதை ஒரு குழந்தையாலும் காண முடியும்.
எந்தச் சமூகத்தில்தான் தீமைகள் இல்லை?
என் நாட்டு மக்களே, நான் பார்த்த பல்வேறு இன மற்றும் நாட்டு மக்களோடு,
நம் மக்களை ஒப்பிட்ட பின்
நான் கண்ட முடிவை இந்த வேளையில்
உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
