அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.
பொன் வெள்ளி இரும்பு போன்றவற்றால் ஆகிய மதில்களே உண்மையான செல்வமென்று கருதிய
அசுர்களுடைய வலிமையை அழிந்து போகும் படி கோபித்த ஈசனும், திருமாலும்
நின் திருவடியே சரண் என்று இருக்க
நின்னை தொழும்அடியார்கள்
இறப்பு, பிறப்பு எனும் இரண்டையும் இவ்வுலகத்தில் அடையார்.
