திருச்சி அருகே உள்ள உய்யக்கொண்டான் மலை உச்சியில்
சிவபெருமானும், அடிவாரத்தில் முருகப்பெருமானும் அமர்ந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் அருளும் முருகப்பெருமான்
வேட வடிவில் காட்சி தருகிறார். இவருக்கு வியர்வை துளிர்ப்பது விசேஷ அம்சம்.
செம்பொன்னார் கோயிலில் ஜடாமகுடத்துடனும், கரங்களில் அட்சமாலை ஏந்தியபடியும்
தவக்கோலத்தில் அருள்கிறார் முருகன்.
