நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?
“நீ பிறந்த போது, நீ அழுதாய்…உலகம் சிரித்தது…
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும்
உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார்.
எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்…
உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள்.
மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
அடிக்கடி கவலை படாதீர்கள்.
தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும்
மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள்.
அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
