திருப்புன்கூர்
நந்தனார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவராததால் அவரை அந்தக் காலத்தில்
கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வில்லை.
நந்தனார் கோவிலுக்கு வெளியே இருந்து சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார்.
அதற்கு நந்தி இடையூறாக இருந்தது.
நந்தனார் சிவபெருமானை வேண்டிட,
இறைவனின் திருவருளால் நந்தனார் ஈசனைத் தரிசிப்பதற்கு ஏதுவாக
நந்தி இருந்த இடத்திலிருந்து சற்று விலகி அமர்ந்தார்.
