ஒவ்வொரு கருவியும் தம் தம்மிடத்தில் பெரிடோனியத்தில் நிறுத்தப் பட்டுள்ளது.
இது வயிற்றுச் சுவரில் ஒட்டியிருந்தாலும், சில இடங்களில் அதைவிட்டுவிலகி,
கருவிகளைப் போர்வை போல் மூடியும் சிலவற்றுடன் ஒட்டிக்கொண்டும் இருக்கிறது
பெருங்குடலில் இது பரவும் பொழுது, மேஸெண்ட்ரீஸ் ( MESENTRIES ) என்று அழைக்கப்படுகிறது.
இவைகள் ரத்தக் குழாய் போவதற்கு இடம் கொடுக்கின்றன.
இந்த பெரிடோனியம் தனியாய் நிற்குமிடங்களிலெல்லாம் ஒரு விதமான வழுக்கும் ரசம் பரவி இருக்கிறது.
இதன் மகிமையால் உள் அடங்கிய கருவிகள் மேலும், கீழுமாய் உறுத்தலின்றி ஏறி இறங்குகின்றன.