மலச்சிக்கல் நிலையில் இந்த சீகம் இவைகளை வெளியே தள்ளுவதில்லை.
இச் சனீஸ்வரக் கூட்டத்துடன் அக்கம் பக்கங்களிலுள்ள சதைக்கோளங்களும் ரசங்களைக் கக்கிக் கலந்து விடுகின்றன.
விஷங்கள் கலந்த இக்குழம்பு, உடைந்து கெடுகின்றது.
உள் இழுக்கப்படாத புஷ்டி சத்தும் இத்துடன் கலக்கவே
இந்த சீகம், பெரிய விஷ இயந்திர சாலையாக மாறிவிடுகிறது.
பிறகு கேட்பானேன்
இங்கிருந்து விசித்திரமான, பயங்கரமான விஷ லாகிரிப் பொருள்கள் உண்டாகின்றன.