ஹிதம் — நித்திரை செய்யும் விதம் ஆரோக்கியத்தையும்
உடல் மனத்திற்கு நன்மை விளைவிக்க வேண்டும்.
சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று மணி நேரம் பின்பும்,
சூர்யோதயத்திற்கு இரண்டு மூன்று மணிக்கு முன்பும் ஏற்படும் ஹிதம் – யுக்தம்.
மேத்யம் — சுத்தமான உறக்கம், கனவு, சினிமாப் படக்காட்சி போல் இல்லாமல்
உண்மையான கேவலம், சுத்த சுழுத்தி ஏற்படவேண்டும். சுத்தமான படுக்கையில்
தூய எண்ணங்களை மனத்தில் நினைத்து உறங்க வேண்டும். இத்தகைய நித்திரையே மேத்யம் – யுக்தம்.
விழிப்பு– மிதம் –இரவைப் பகலாக்கி விழித்தல் கூடாது. தேவையான நித்திரைக்கு இந்த விழித்தல்
இடம் தர வேண்டும்.இதுவே மிதம் – யுக்தம்.
ஹிதம் — விழித்தல் நன்மை பெருக்கும் தொகுதியில் இருக்கவேண்டும்.