யோக பாஷையில் பிணி என்பதானது பிராணா,
பிராண சக்தி ஒழுங்கான ஒருவித சமாதான முறையில் சரீரம்,
சரீர தர்மங்கள் முழுவதிலும் பரவி நிற்காமல், ஏற்ற தாழ்வுறுவதே,
பிராணாவின் சமாதானமற்ற நிலையே ( STATE OF INEQUILIBRIUM ) பிணி.
இந்தப் பிராணாவை சமாதான நிலைக்குச் சரி செய்வதே சிகிச்சை எந்த
பாகத்தில் எந்த கருவியில் பிராண குறைந்திருக்கிறதோ அதற்கு அதிகமாக
இருக்குமிடத்திலிருந்தோ அகண்டக் களஞ்சியத்திலிருந்தோ பிராணாவை
அளித்து அக்குறையை நீக்குதல் சிகிச்சை, அதே போல அதிகப் பிராண வேகம்,
சலனம் ஒரிடத்திலிருந்தால் அதைக் குறைத்து, எடுத்து அகற்றி, அல்லது
சமாதானமாகப் பரப்பி, சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு கருவியும்,
ஒவ்வொரு பாகமும், ஒவ்வொரு தன்மையில் ஒவ்வொரு பொருளிலிருந்து,
பிராணாவை நிரப்பிக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ சமாதானம்
செய்து கொள்ளவோ, சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.