புஜங்காசனம்
குப்புறப் படுத்துக் கொண்டு கைகளைப் பக்கங்களில் காதுக்கு நேராக
தரையில் பொத்தியவாறு வைத்து தலையை மட்டும் பாம்பு போல் மெதுவாக முடிந்தவரை தூக்கி
கழுத்துக்குப்பின் வளைக்கவும்.
சாதாரண மூச்சு , பின் மெதுவாகத் தலையைக் கீழே இறக்கவும்.
ஒருமுறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.
புஜங்கம் என்றால் பாம்பு எனப் பொருள்.
பாம்பு படம் எடுப்பதைப் போல் வளைவதால் இவ்வாசனம் புஜங்காசனம் பெயர் பெற்றது.
பலன்கள் ––
வயிற்றைறையில் தசைகள் இழுக்கப்படுவதால் அங்கு ரத்த ஒட்டம் ஏற்படும்.
முதுகெலும்பு பலம் பெறும்.
மார்பு விரிந்து விலாவில் பலமடையும்.
ஆஸ்துமா நோய்க்கு முக்கிய ஆசனம்.