மிதுனம் :- “தண்டுக்கொண்டு இல்புகே”என்ற இந்த ராசி ஆணும், பெண்ணும் இணைந்திருப்பதைப் போன்ற தோற்றமுடைய இந்த ராசி வான வெளியில் 60 பாகை முதல் 90 பாகை வரை வியாபித்துள்ளதாகும். கால புருஷனின் மூன்றாவது ராசியான இது ஆண் தன்மை உடையது. உபய ராசி இதன் அதிபதி புதன் ஆகும். ஒற்றை ராசி என்ற அமைப்பைக் கொண்டது. உறுதியும் துணிவும் மிக்கது. அதிக அளவு மூளை பலம் மிக்கது. அதிக புத்திசாலி தனத்தையும் மிகச் சிறந்த திறமையும் உடையது. இரட்டை அமைப்புக்கொண்டது. வளையும் தன்மை மிக்கது. இரக்க உணர்ச்சியும் இணங்கி போதலும் இதன் குணமாகும். வடமுக ராசியில் மூன்றாவது காற்று ராசி. இயற்கையிலேயே கற்பனை வளம் உடையது. சங்கீதம் ஆடல், பாடல் ஆகியவற்றில் விருப்பும் நல்ல மனோ சக்தியையும் உடையது. வரண்ட ராசியான இது மலட்டுத் தன்மை உடையது. எண்ணிய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க அதிக பிரயாசையும் வெற்றி அடைய அதிக உழைப்பும் தேவைப்படும் ராசி இதன் முதல் 10 பாகை முதல் திரிகோணம் பெண் தன்மை உடையது. புதனுடைய ஆளுமைக்கு உட்பட்டது. இரண்டாவது 10 பாகையாயுள்ள இரண்டாவது திரேக்காணம் ஆண் பறவை ஆயுதமுடையது சுக்கிரனுடைய ஆளுமைக்கு உட்பட்டது. மூன்றாவது 10 பாகை மூன்றாவது திரிகோணம் ஆண் தன்மை ஆயுதமுடையது சனியின் ஆளுமைக்கு உடையது. இந்த ராசியில் எந்த கிரகமும் உச்சமோ, நீச்சமோ அடைவதில்லை. குரு, செவ்வாய் பகை அடைகிறது. சூரியன் சமம் என்னும் அமைப்பை அடைகிறது புதனின் ஆட்சி வீடாகிய இது மற்ற கிரகங்களுக்கு நட்பு ஸ்தானமாகவே இருக்கிறது. இதில் 1 பாகை 4 பர்லாங்கை குறிக்கும் சிரோதய ராசி பகல் இரவு இரண்டிலும் பலம் மிக்கது. இது பெட்டிகள், குன்றுகள், மலைகள் பள்ளிகூடங்கள் வாசக சாலை முதலியவற்றை குறிக்கும் காலபுருஷனின் புஜங்களை குறிக்கும். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaOctober 13, 2020Leave a commentTags: divine power athmaகோள்களின் கோலாட்டம்பகல் இரவுபுதன்மிதுனம். Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:தவறுகளின் பாதைNextNext post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் கடகம் :-Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 10May 14, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 9May 13, 2026நட்சத்திர எதிரிடையில் நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 8May 12, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 7May 11, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026