எண்ணற்ற திருகோவில்கள், மடங்கள், ஆசிரமங்கள், ஸ்நான கட்டங்கள் நிறைந்த நகரம்.
சார்தாம் யாத்திரை அதாவது இமயமலை பயணத்திற்கு இந்நகரம்தான் நுழைவு வாயில்.
மகாவிஷ்ணு மது கைடபரை அழித்த இடம் ரிஷிகேசம்.
மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பெற்று கங்கையின் கரையில் அமைந்துள்ளது
இந்த புண்ணிய நகரம்.
புராதன காலத்தில் இருந்தே மகான்களையும், ரிஷிகளையும் ஈர்த்து வந்த பகுதி.
இந்நகரத்தின் ஒரு பகுதி முனி-கா-ரேதி அதாவது
முனிவர்கள் பாதம் பட்ட மண் என்று அழைக்கப்படுகின்றது.
