அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல்நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.
செந்தாமரை மலரிலும் என் இருதயத்தில் உள்ள தாமரையிலும் இருப்பவளே
தாமரையின் அரும்பு போன்ற தனங்களை உடையவளே
நின் கருணை விழியாகிய தாமைரையும் முகமெனும் தாமரையும்
திரு கரங்களில் இருக்கும் மலரும்
உன் திருவடி தாமரையையும் தவிர
வேறு ஒன்றையும் சரணடையோர்
இதை தவிர வேறு தஞ்சமும் புகலிடமும்
எனக்கு இல்லை.
