வாழும் படிஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படிஅன்று, விள்ளும்படிஅன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
எப்போதும் உள்ள இன்பத்தில் இருக்கும்படியான வாழும் முறையை
அந்த பரம் பொருளின் மெய் ஞானத்தால் அறிந்து கொண்டேன்
அந்த வழி மனதில் ஒருவர் விரும்பி தியானிக்குமாறு உள்ளதல்ல
வாயினாலும் சொல்ல இயலாது
கடல் ஏழும் உலகு ஏழும் அசைக்க முடியாமல் இருப்பது
அது இரவையும் பகலையும் உண்டாக்கும் சூரிய சந்திரனுக்கு
இடையே சுடராக அமைந்து விளங்குகிறது.
