பரிபுரச் சீறடிப் பாசாங்குசை,பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச்சிலைக் கை,
எரிபுரை மேனி, இறைவர் செம்பாகத் திருந்தவளே.
மன்மதனின் ஐந்து மலர்பாணங்களை தரித்தவளே சிறிய திருவடிகளில் சிலம்பை அணிந்தவளே
இனிய சொற்களை உடைய திரிபுர சுந்தரியே
செந்தூர நிறத்திற்கு ஒப்பான மேனி உடையவளே
மனதில் வஞ்சம் கொண்ட அசுரர்களை அழிக்கும்
சிவபிரானின் இடபாகத்தை கொண்டவளே!
