வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன, திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
ஸ்ரீ சக்கரத்தில் உள்ள 9 கோணங்கள்
ஒளி வீச காரணமாய் உள்ள தாயே
நின் திருவடிவை புறக்கண்ணிலும் அந்த தேஜஸ்யை அகக்கண்ணிலும்
கண்ட எனக்கு ஏற்பட்ட ஆனந்த வெள்ளத்திற்கு கரைகளே இல்லை
இந்த காட்சியின் அருளுள் என் உள்ளத்து உள்ளே மெய்ஞானம் விளங்குகின்றது.
இவ்வளவு பேரருளை செய்வதற்கு காரணம் எத்தகையே திருஉள்ளமோ.
