*கபில கீதை* – தாய் தேவாஹுதிக்கு மகன், கபில மஹரிஷி போதிப்பது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
*நஹுஸ கீதை* – நஹுஸன் மற்று யுதிஷ்டிரருக்கு இடையிலான உரையாடல். மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது.
*நாரத கீதை* – ஸ்ரீ கிருஷ்ணருக்கும் நாரதருக்கும் இடையிலான உரையாடல்.
இது ஒரு ஆன்மீக ஆர்வலரின் பொதுவான தேவைகளை கூறுகின்றது.
இது குரு அல்லது ஆன்மீக போதகரின் ஆதிபத்யத்தை வலியுறுத்துகிறது.
*பாண்டவ கீதை* – ஆதி நாராயணனின் வெவ்வேறு பக்தர்கள் வழங்கும் பல்வேறு பிரார்த்தனைகளின் தொகுப்பு.
இது ப்ரபண்ண கீதை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கீதை,
சரணடைதலின் பாடல் என்று குறிப்பிடப்படுகிறது. வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுக்கப்பட்ட
அழகான வசனங்களின் தொகுப்பு.
இந்த கீதையில் விவரிக்கப்பட்டுள்ள பாடலை
அனைத்து பாவங்களையும் அழித்து விடுதலையை வழங்குவதற்காக பாண்டவர்கள் பாடியுள்ளனர்.
