பிக்ஷு கீதை* – பேராசை கொண்ட ப்ராமணரின் வடிவத்தில் கிருஷ்ணர்,
பின்னர் ஒரு முனிவராகி உத்தவருக்கு ஒரு பாடலைப் பாடுகிறார்.
சுமையாக இருக்கின்ற மனதைக் கட்டுப்படுத்தும் முறையை அதில் கூறுகின்றார். இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
கோபி கீதை* – ஸ்ரீ கிருஷ்ணரைப் பிரிந்த கோபியரின் பாடல்.
இந்த கீதை ஆதிமூலத்திடம் கொண்ட மிக உயர்ந்த பக்தியால் நிறைந்துள்ளது. இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது.
ஹம்ஸ கீதை* – ஓர் அன்னபக்ஷியின் வடிவில் ஸ்ரீ விஷ்ணு பிரம்ம குமாரர்களுடன் உரையாடியது.
இந்த கீதை உலகை ஒரு மாயையாகவும், ஆத்மா மட்டுமே நிரந்தர யதார்த்தமாகவும் கருதுகிறது.
இது ஸ்ரீமத் பாகவதத்தில் காணப்படுகிறது. இதை உத்தவ கீதை என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஜீவன்முக்தா கீதை* – ஜீவன்முக்தத்தின் (முக்தி அடைந்த ஜீவன்) இயல்பை ரிஷி தத்தாத்ரேயர் விவரிப்பது.
