இந்த ஒருமைதான் எல்லா நீதி நெறிக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படை
இது நமது பாமர மக்களுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவையோ,
அவ்வுளவு அவசரமாக ஐரோப்பியர்களுக்க தேவைப்படுகிறது.
இங்கிலாந்திலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் இன்று உருவாகி வருகின்ற
நவீன அரசியல் மற்றும் சமுதாய மலர்ச்சிகளுக்கு,
அவர்கள் அறியாமலே, இந்த மகத்தான கருத்துதான் அடிப்படையாக இருக்கிறது.
