மேலே சொன்ன திரைகளனைத்தும் நம் செயல்களின் விளைவுகளால் உண்டானது என்று சொன்னால்
நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம்
உண்மை என்னவென்றால்
நாம் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உண்மை இது தான்
இதை அறிந்து கொண்ட பின் நாம் நமது செயல்களில் கவனம் வைத்து செயல்களை செய்து பழக வேண்டும்
அது எப்படியென்றால் செயல்கள் இருக்கும் விளைவுகள் இருக்கும்
ஆனால் பதிவுகள் இருக்காது.
இந்த முறையில் செயல்களை செய்ய தான்
கீதை நமக்கு அறிவுறுத்துகிறது.
