அந்த திரைகள் ஆணவம், கன்மம், மாயை இதன் உப பிரிவுகளாக வருவது
காம, குரோத, மோக, மத மாச்சர்யம்,
அன்பு, பாசம், நேசம், பரிவு, தியாகம், இரக்கம் போன்றவை
இவை அனைத்தும் மனதில் திரைகளாக இருக்கும் வரை அறிவு மனதில் முடங்கியே இருக்கிறது.
சொல்லப்போனால் அந்த அறிவு சூரியன் இருட்டிலேயே இருக்கிறது
இதுவும் முரண்பாடான வாக்கியமே ஆனால் புரிந்து கொண்டால் புரியும்
ரொம்ப சுலபமாய் இயல்பாய் சொல்வது என்றால்
அவரவர் ஆன்மாவை அறியாத அறிவு
அறிவேயல்ல என்பது தான்.
