கேரளா மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் உள்ள சிவபெருமான் ஒவ்வொரு வேளையிலும்
ஒவ்வொரு வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
அதிகாலை தொடங்கி காலை 8 மணி வரை தட்சிணாமூர்த்தியாகவும்,
உச்சிப் பொழுதில் வேடுவ வடிவிலும், மாலையில் பார்வதி, விநாயகர்,
முருகப்பெருமான் ஆகியோருடன் குடும்ப சகிதமாகவும் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.