3 – க்குரியவர் பரிவர்த்தனை பெற்று, செவ்வாய் பலம் பெற்று சுபரால் பார்க்கப்பட்டால்,
6, 7 உடன் பிறப்புக்கள் உண்டு. உடன் பிறப்புக்கள் ஒருவருக்கொருவர் முன்னேறுவர்.
ஒற்றுமையில் குறைவு இருக்காது. சொத்துக்கள் சேரும்.
இவர்களுக்கு வரும் மனைவிமார்களால் குடும்பம் பிளவுபடும்.
3 – ஆம் பாவாதிபதி எத்தனை அம்சம் கடந்து உள்ளாரோ, அத்தனை உடன் பிறப்புக்கள் உண்டு.
3 – ஆம் பாவாதிபதி வர்க்கோத்தம், உச்சம் பெற்றிருந்தால், எத்தனை அம்சம் கடந்துள்ளாரோ
அதற்கு இரு மடங்கு சகோதர, சகோதரிகள் பிறப்பார்கள்.
சுப ஆதிபத்திய பெற்ற கிரகங்கள், செவ்வாயையோ, 3 – ம் பாவாதிபதியையோ, 11 – ஆம் பாவதிபதியையோ பார்த்தால்
உடன் பிறப்புக்கள் நல்ல நிலையில் இருப்பார். பாபர் பார்த்தால் உடன் பிறப்புக்கள் பிறந்து இறப்பர்.
3 – ஆம் பாவாதிபதி செவ்வாய் இவர்களில், எவர் பலம் பெற்று உள்ளாரோ அவரை வைத்து
நவாம்ச ஒட்டத்தை கண்டு உடன் பிறப்பின் எண்ணிக்கையை சொல்ல வேண்டும்.