ஞானம் பலம் கிரியையே ( அறிவு ஆற்றல் செயல் ) கடவுள்.
கடவுளுக்கு உருவம் தேவை இல்லை. ஏனென்றால் எல்லையற்ற அறிவை
ஏந்தி வைத்திருக்க ஒரு தகுந்த உருவம் தேவை. உண்மையில் கடவுளுக்கு
இத்தகைய உதவி தேவைப்படுவதில்லை. இயங்கும் ஆன்மா என்பது ஒன்றில்லை.
ஒரே ஆன்மாதான் உள்ளது. ஐந்து உயிர்த் தத்துவங்கள் சேர்ந்துள்ள இந்த உடலை
ஜீவாத்மா அடக்கி ஆள்கிறது. இருப்பினும் ஜீவாத்மா என்பது பரமாத்மாவே.
ஏனெனில் பரமாத்மாவே அனைத்தும். ஜீவாத்மாவான நீ உன்னிடம் இல்லாத ஒன்றை
இருப்பதாக நினைத்து மயக்கம் கொள்கிறாய். நீயே கடவுள். உன்னைப் பற்றி வேறுவிதமாக
நினைப்பது எல்லாம் தவறே. நீ கிருஷ்ணராக நீ வணங்கக் கூடாது. ஆத்ம சொரூபத்தை
வணங்குவதால் மட்டுமே நீ முக்தி அடைய முடியும். ஆன்மாவே சகுனக் கடவுளாக
ஆக்கப்பட்டிருக்கிறது. தனது உண்மை சொரூபத்தை ஆழ்ந்து நாடுதலே பக்தி என்கிறார் சங்கரர்.