உங்களை
சிரிக்க வைத்தவர்களுக்கு
அழ வைத்தவர்களுக்கு
உங்களோடு தொடரப் போகிறவர்களுக்கு
உங்களை விட்டு விலகிப் போனவர்களுக்கு …
பாராட்டியவர்களுக்கு
பாடம் கற்பித்தவர்களுக்கு .
அன்பு செய்தவர்களுக்கு
வெறுத்தவர்களுக்கு
தட்டிக் கொடுத்தவர்களுக்கு
இவர்கள் எல்லோரும்
உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை
உங்களுக்கே உணர்த்தியவர்கள்
அதனால்
நன்றி சொல்லுங்கள்
எப்போதும்
சந்தோஷமாய் இருப்பீர்கள்