ஆசிரியர்:
உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம்!
அம்மா: அவனுக்கு “பொய் ” சொல்லவே தெரியாது சார்.
தந்தை:
எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்:
நீங்க தானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?
என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்
இந்நேரம் விழுந்திருக்குமே சார்?
இன்னும் விழுந்திருக்காது, சார் அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!