லக்கினாதிபதி 10 – ல் நிற்க, 2 – க்குடையவர் 9 – ல் நிற்க, 4 – க்குடையவர் 4 – ல் நிற்க சிவபக்தி உடையவர்.
லக்கினாதிபதி கேந்திரமடைய, அக்கேந்திராதிபதி திரிகோணம் அடைய, சந்திரன் ஆட்சி அடைய.
லக்கினாதிபதியும், 2- க்குடையவரும் கூடி கேந்திரமடைய, 4 – க்குடையவர் 9 – ல் நிற்க, 10 – க்குடையவர்
திரிகோணமடைய இவர்களை குரு பார்க்க, தர்மம், கல்வி, தெய்வ பக்தி உடையவர்.
லக்கினாதிபதியும் 2 – க்குடையவரும் கூடி லக்கினத்தில் நிற்க, புதன் ராகுவுடன் கூடி 10 – ல் நிற்க,
பாக்கியாதிபதியாக இருப்பார்.
லக்கினாதிபதி ஆட்சி அடைய 3, 12 – க்குடையவர் குருவுக்கு திரிகோணத்தில் நிற்க,
10 – க்குடையவர் கேந்திரமடைய தெய்வச் செலவு, சுகவாழ்வு உடையவர்