லக்கினாதிபதியும், 2 – க்குடையவரும் ஆட்சி அடைய, 9 – க்குடையவர் 4 – ல் நிற்க,
10 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, கல்விச் செல்வம், நிறை பெற்ற வாழ்வு பெற்றவராவார்.
9, 11 – க்குடையவர் கூடி 3 – ல் நிற்க, சத்தியம், தர்மம், பூமி, கல்வி உடையவர்.
லக்கினத்தில் சூரியன் நிற்க, 2 – ல் புதன் நிற்க, 9 – க்குடையவர் 11 – ல் நிற்க, பொருள் உடையவர்.
1, 3, 4 – க்குரியவர்கள் மூவரும் கூடி திரிகோணமடைய 2 – க்குடையவர் குருவிற்கு 11 – ல் நிற்க,
கல்வி, செல்வம் உடையவர்.
4 – க்குடையவர் 4 – ல் நிற்க, 2 – க்குடையவர் 4 – க்கு, 2 – ல் நிற்க,
9 – க்குடையவர் 12 – ல் நிற்க, வேதாகம் கற்றவர்.