41) லக்கின கேந்திரத்தில் சனி, குரு, கேது தொடர்பு ஏற்பட்டாலும் லக்கினத்தைப் பார்த்தாலும்,
ஞானநிலை கிட்டும்.
42) லக்கினத்திற்கு 3 – க்குரியவனும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் சேர்ந்து,
ராகு, கேதுவின் தொடர்பை பெற்று இரட்டை ராசியிலிருந்தால் இரட்டைக் குழந்தை பிறக்கும்.
43) 1 – க்குரியவர், 1, 4, 7, 10 – லிருந்து, 5 – க்குரியவர் தொடர்பை பெற்றால் கீர்த்தி, செல்வாக்கு, பலரால்
பாரட்டப்படுவது, அரசியலில் முன்னேற்றம், உயர்பதவி பெற வாய்ப்பு உண்டு.
சுபத்தன்மை பெற்ற குரு பார்வை நல்லது.
44) 1 – ல் 3 – க்குரியவர் 9 – க்குரியவர் பலம் பெற்று, சுக்கிரன், குருவின் தொடர்பு இருப்பின்
ஜப, தவங்கள் செய்து, மடாதிபதி ஆவார் தெய்வ பலம் கிட்டும்.
45) லக்கினாதிபதி எந்த கிரகமானாலும் பலம் பெற்று இருக்க வேண்டும்.
மேசம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் இந்த லக்கினத்திற்கு
லக்கினாதிபதி 3, 6, 8 – இல் இருப்பது தவறில்லை.