அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற வார்த்தைகளுக்கு
பொருள் தேடுவது என்றால் எங்கும் செல்ல வேண்டாம். இதன் பொருள்
நம்மிடமே உள்ளது. அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர் வீச்சு
பிண்டமான நம்மை ஆட்கொள்வதில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர்வீச்சு பூமியில் பாய்வதையே
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிறோம்.
பஞ்ச பூதங்களை நவக்கிரகமாகவும், 27 நட்சத்திரங்களாகவும் பாகுபடுத்தி விட்டு
இவைகளையே மனிதனின் அங்கங்களில் குடியேற செய்து வீட்டின் உரிமையாளராக
பஞ்சபூதமும் அவரின் உதவியாளர்களாக நவக்கிரகங்களும்,
இந்த உதவியாளர்களுக்கு காரியதரிசிகளாக 27 நட்சத்திரங்களும் இருந்து
மனித உடலுக்கு வாடகையாக தந்து வாடகையை வசூலிக்கும்
தன்மைகளைப் பார்க்கும்போது இதன் விநோதம் என்ன?
அதன் விளையாட்டும் ஆடும் ஆட்டமும் படுத்தும் பாடும் அப்பப்பா……