” கொற்றவனே கதிரவனும் கோணமேற
செப்பினேன் ஜென்மனுக்கு யோகம் மெத்த ”
என்று புலிப்பாணி சொன்னபடி
சூரியன் 5. 9ல் இருப்பினும் யோகபலனைத் தருவார் எனச் சொல்லி உள்ளது.
இது நடைமுறையில் செயல்படுவதாகும்.
இதே போல் சுக்கிரன் 1, 4, 5, 7, 9, 10 ல் இருந்து
அந்த வீட்டின் அதிபதி சுக்கிரனுக்கு நல்ல நிலையில் இருப்பின்
நல்ல யோகங்களை விர்த்தி செய்கிறார்.
லக்னாதிபதியான சுக்கிரன் 8க்குரிய ஆதிபத்திய தோஷம் செய்யார் என பல நூல்கள்
சொல்லி இருப்பினும், லக்கினாதிபதியான சுக்கிரன்திசை, திருவாதிரை, சுவாதி, சதயம்,
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் துலாலக்கினமாக
பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை வரும் போது மாரகம், கண்டம் தர இடம் உண்டு.
இக்காலம் மிருத்துஞ்ச ஹோமம் பயன்தரும்.
constellation illustration.
இந்த லக்கினத்தில் பிறந்த அனேகருக்கு 2 தாரம் ஏற்படுகிறது. யோகபலன்களைத் தரும்
புதன், சுக்கிரன், சனி போன்ற கிரகங்கள் பாதிப்பைத் தருவதையும் பார்க்கிறோம்.
காரணம் என்ன?
புதன் பாக்கிய விரையாதிபதி, கொடுத்து, கெடுக்கும் தன்மை உள்ளவர். சந்திரன் நிலையான
தன்மை பெற்றவர் அல்ல. இவ் அமைப்பு பெற்ற புதன், சுந்திரன் சேர்க்கை யோக பலனை
விர்த்தி செய்வதில்லை. யோக பலன்களைத் தந்தால் கடைசியில் கெடுத்துவிடுவது
கண்கூடு. மேலும் இந்த புதன், சந்திரன் சேர்க்கையோடும், 2, 7 க்குரிய செவ்வாய் சேர்ந்தால்
அவர்கள் தசாபுத்தி வரும்காலம் காமம் தலைக்கேறி கண் மறைத்து குழந்தை, குமரி, கிழவி,
என்ற தராதரம் இன்றி செயல்படும் எண்ணத்தைத் தந்து,
வேடிக்கை பார்க்க வைத்து விடுகிறார்கள். ” இது, அவன், அவன் தலை எழுத்து ”.