கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையை ‘ நோட்டம் ‘ விடாமல் இருந்தால் சரி, அப்படி நோட்டம் விடாமல் இருப்பது இவர்கள் வாழ்க்கைக்கு ஒளி சேர்ப்பதாக அமையும். இந்த லக்கினத்தில் பிறந்த பெரும்பாலான ஆண்கள், தம் மனைவியை துன்புறத்தாமல் இருப்பதில்லை. பெண்கள் தன் கணவனிடத்தில் அலட்சிய நோக்கோடு செயல்படாமல் இருப்பதில்லை. நிலையான இடத்தில் தன் தொழிலைப் பலப்படுத்த முடியாத இளைஞர்களுக்கு சனி, ராகு திசைகள் பெரும் யோகத்தைத் தருகிறது. ஆனால் நிலையற்றதாகவே அவை இருக்கும். குரு திசை கடைக்கூறும், செவ்வாய் திசை முதற்கூறம் யோகத்தைத் தருகிறது. சூரியன் பிதுர்நிலை, சந்திரன் மனோநிலை தடுமாறச் செய்வர். கேது சந்நியாசத்தை உண்டாக்குவர். சுக்கிரன் பெண்கள் வகை உல்லாசம். சுக்கிரன் மதுபானம், பெண்கள் சல்லாபங்களைத் தந்து ஜாதகரை படு குழியில் தள்ளுவார். ராகு காம இச்சையை அதிகப்படுத்துவார். சனி, புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களோடு சம்பந்தப்பட்ட எந்தக் கிரகங்களும் கண்டம், விபத்து, மாரகம், போன்றவைகளைத் தராமல் இருக்காது. ஆனால் குருவும், செவ்வாயும் ஒன்று சேர்ந்து இருப்பின் எவ்வகை பாதிப்பு ஏற்பட்டாலும், தன்நிலையை உயர்த்தி அறிவையும் புகட்டுவார்கள். கூறப்பா கடகத்தில் ஜெனித்த பேர்க்கு கொடுமை பலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி” இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் பாதிப்பான பலன்களையே எங்கிருந்தாலும் தருகிறார். 5,9-ல் இருப்பது அதிக பாதிப்பு இல்லை. இந்த சுக்கிரன் மற்ற கிரகங்களோடு சேரும்போது பலன்கள் மாறுபட்டு நடக்கிறது. அஞ்சுக்கும் பத்துக்கும் மடையோன்-அவர் அன்பாக வைத்தேழு தனலாபம் பத்தில் கொஞ்சும் குழவிக்கு யோகம் -சித்தர் கூறினார் விதி தீர்க்கும் அறிந்துறை தோழி செவ்வாய் 2,5,7,10,11-ல் இருப்பது மிக நல்லதாக சொல்கிறது. இப்பாடல் நல்லமுறையில் சரியாக வருகிறது. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 19, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகண்டம்சுக்கிரன்பெண்கள்மதுபானம்மாரகம்யோகம்விபத்து Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 11NextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 12Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5January 30, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4January 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3January 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2January 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு. 1January 26, 2026