லக்ன நிர்ணயம் கிரேதாயுகத்திற்கு நிஷேக முகூர்த்தமே ஜென்ம லக்கினமாகும். திரேதாயுகத்திற்கு – ஆதான முகூர்த்தமே ஜென்ம லக்கினம் துவாபர யுகத்திற்கு சிரசு உதயமே ஜென்ம லக்கினம். கலியுகத்திற்கு பூ உதயமே ஜென்ம லக்கினமாக கொள்ள வேண்டும் என்பது குமார சுவாமிகள் கருத்து. இக்கலியுகத்தில் சிசு தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்து பூமியின் இயக்கத்தில் கட்டுப்படும் நேரமே அதாவது பூ உதய நேரமே ஜென்ம லக்கினமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் கர்ப்பத்தில் சிசு உள்ள போதே நவக்கிரகங்களின் கதிர் வீச்சு குழந்தைக்கு எற்படுகிறது. ஆண், பெண் சேர்க்கை ஏற்படும் போதே பெண்ணின் கர்ப்பத்தில் கரு உருவாகும் காலம் முதல் நவக்கிரகங்களின் இயக்கம் செயல்படுகிறது. இது வினை விதிக்கு உட்பட்டது. தாய் கர்ப்பத்தில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த சிசு பூமியின் செயல்பாடுகளில் இயங்கும்போது ஏற்படும் நவக்கிரகங்களின் கதிர் வீச்சுகள் அந்த சிசுவின் வினைவிக்குட்பட்டே செயல்களை அனுபவிக்க வைக்கிறது என்பதால் உதய காலத்தை ஜென்ம லக்கினமாக எடுத்து நாம் பலா பலன்களை பார்க்கிறோம். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaJanuary 21, 2021Leave a commentTags: aathmaaஆதான முகூர்த்தம்கதிர் வீச்சுசிசுபூ உதய நேரம்விதிவினை Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:நட்சத்திரத்தின் சிறப்பு 2NextNext post:கால பலம். கேந்திரத்தின் வலுத்தன்மை. கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.6Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5January 30, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4January 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3January 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2January 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு. 1January 26, 2026