கன்னி:- “கன்னி மகனை கைவிடேல்” என்ற இந்த ராசி, அழகிய பெண்ணை போல தோற்றமுடைய அமைப்பை உடையது இந்த ராசி வான மண்டலத்தில் 150 பாகை முதல் 180 பாகை வரை வியாபித்துள்ள பகுதியாகும். கால புருஷனின் ஆறாவது ராசி இதன் அதிபதி புதன் ஆகும். இது உபய ராசி ஆகும். இருமடிப்புள்ள இரட்டை தன்மையுடைய ராசியாகிய இது சஞ்சலப்படுதல் வளையும் தன்மை இரக்க குணம் உடையது. மண் தன்மையுடையது அதனால் லோகாதாய வாழ்க்கையில் விருப்பும், சிந்தனை அனைத்தும் அதிலேயே இருக்கும். தன காரியத்திலேயே கண்ணாய் இருப்பர் சிக்கன தன்மை உடைய இந்த ராசி சுய பாதுகாப்பும் மிக்கதாகும். வரண்ட ராசி இது மலட்டு ராசியும் கூட எல்லா காரியங்களிலும் அதிக அளவு பிரயாசை ஊக்கம், உழைப்பு தேவைப்படும். ராசி குணத்தில் இது சத்துவ குணம் உடையது. இது தென் திசையை குறிப்பது. புதன் இந்த ராசியில் உச்ச அமைப்பும் சுக்கிரன் நீச்ச தன்மையும் அடைகிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், குரு இவைகளுக்கு பகைவீடாகவும் சனி, ராகு, கேதுவுக்கு நட்பு வீடாகவும் அமைகிறது சிரோதய ராசி. இதன் முதல் 10 பாகையாகிய முதல் திரிகோணம் பெண் தன்மை உடையது அதிபதி புதன் இரண்டாவது 10 பாகையாகிய இரண்டாவது திரிகோணம் ஆண் ஆயுதம் தாங்கியது அதிபதி சனி மூன்றாவது 10 பாகை மூன்றாவது திரிகோணம் பெண் தன்மை உடையது அதிபதி சுக்கிரன். இது 1 பாகைக்கு 4 பர்லாங்கை குறிக்கும். வாசக சாலை விளையாட்டு மைதானம், புத்தகங்கள் அடிக்கி வைக்கும் கட்டு, அச்சுகூடம் முதலியவற்றை குறிக்கும். வடமுக ராசியில் கடைசி ராசி Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaOctober 16, 2020Leave a commentTags: கன்னி: kanni divine power athmaகோள்களின் கோலாட்டம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் சிம்மம்:-NextNext post:ஆலம்Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5January 30, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4January 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3January 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2January 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு. 1January 26, 2026