Skip to content
ஒரு பெரியவர் எப்போதுபார்த்தாலும் தன்னுடைய வீட்டுவாசலில் அமர்ந்தபடி
பகவத்கீதையை படித்துக் கொண்டே இருப்பார்.
இளைஞன் ஒருவன்பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டே இருந்தான்.
ஒரு நாள் அவரிடம்வந்து கேட்டான் ,
” தாத்தா! எப்பப்பாத்தாலும் இந்த புத்தகத்தையேபடிச்சிட்டு இருக்கீங்களே.
இதை எத்தனைநாளா படிக்கிறீங்க?” என்றான்.
பெரியவர் சொன்னார்,” ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம்இருக்கும் “.”
அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்குமனப்பாடம் ஆயிருக்குமே!
அப்புறம் ஏன்இன்னும் படிக்கிறிங்க ?” என்றான்.
தாத்தா சிரித்தபடி கூறினார்,
” எனக்கு ஒரு உதவி செய். நீ செஞ்சுமுடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்”.
இளைஞன் கேட்டான்,” என்ன உதவி தாத்தா?
“பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில்
இருந்த ஒரு மூங்கில் கூடையைஎடுத்தார்.
அதில் அடுப்புக் கரிஇருந்தது.
அதை ஒரு மூலையில்கொட்டினார்.
பல நாட்களாகக் கரியைசுமந்து சுமந்து அந்தக் கூடையின்
உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.
பெரியவர் சொன்னார்,” தம்பி, அதோ இருக்குற பைப்புலஇருந்து
இந்தக் கூடையில கொஞ்சம்தண்ணி பிடியேன்
“இளைஞனுக்கு சிரிப்பு வந்தது.
இருந்தாலும் பெரியவர் சொல்லிவிட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர்
நிரப்பி எடுத்து வந்தான்.
அவன் வந்துசேருவதற்கு முன்பே எல்லா நீரும்
தரையில் ஒழுகிப்போனது. பெரியவர்சொன்னார்,
” இன்னும் ஒரு முறை ” . இளைஞன்மீண்டும் முயன்றான்.
ஆனால் மூங்கில்கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?
மீண்டும் சிந்திப் போனது. பெரியவர்கேட்டார்,” தாத்தாவுக்காக
இன்னும் ஒரே ஒருமுறை மட்டும் ” .
இளைஞன் ஒருமுடிவுக்கு வந்தான்.
“இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடிசெய்து விட்டு
திரும்பிப் பார்க்காமல்ஓடிவிடுவோம்.
அவர் எந்தப் புத்தகத்தைப்படித்தால் எனக்கென்ன வந்தது? “
தண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே
எல்லாத் தண்ணீரும் தரையில்.” தாத்தா, இந்தாங்க உங்க கூடை.
இதில்
தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத்தெரியுமா தெரியாதா?
எதுக்கு
என்னை இந்தப் பாடு படுத்தினிங்க “என்றான்.
அவர் புன்னகையோடு சொன்னார்,
” இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும்தெரியும்
நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப்போகும் போது இதோட உட்புறம் எப்படிஇருந்தது? ” என்றார்.
இளைஞன் சொன்னான் ,” ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா
இருந்தது “”இப்போ பார் “என்றார்.
தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின்உட்புறம் சுத்தமாகி இருந்தது.
பெரியவர் சொன்னார்,” தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில்இதுதான்.
எத்தனை முறை தண்ணீர்
பிடிச்சாலும் மூங்கில் கூடைநிரம்பவே இல்லை.
ஆனாலும் ஒவ்வொருமுறையும் கூடை சுத்தமாயிடிச்சு.
அது போலத்தான்
எத்தனை முறை படிச்சாலும்
முழுபகவத்கீதையும் மனப்பாடம் ஆயிடும்னுசொல்ல முடியாது.
ஆனா படிக்கிறஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள
இருக்கும் அழுக்கும், கறையும்சுத்தமாகிக்கிட்டே இருக்கும்” என்றார்.
இளைஞனுக்குள்ளே என்னென்னவோ புரிந்தது
Go to Top
Made me to realise to read the books which ayya said.thank you ayya.