விருச்சிகம்.
1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்–
வஸ்திரம் ஆபரணம் சரிவர இல்லாதவளும்
தனது இருப்பிடத்திலிருந்து விலகியவளும்,
பாம்பினால் கடிபட்ட பாதத்தையுடையவளும்
அழகு பொருந்தியவளுமான தோற்றம்,
கடலில் இருந்து கரையை நோக்கி வரும் தன்மை
செவ்வாய் நாயகன் –
ஸ்திரீ கிரகம்
பலம் – கழுத்துவரை.
10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்–
ஆமை, குடம் இவற்றிற்கொப்பான சரீரமுடையவள்
பாம்பினால் சுற்றப்பட்ட ஸ்திரீயானவள்.
கணவனுக்காக இடம், சுகம் இவைகளை விரும்புகிறாள்.
குரு நாயகன்,
ஆண் கிரகம்
பலம்- தொப்புள் வரை.
20 முதல் 30 பாகைக்குள் — நாற்கால்திரேக்காணம்–
பெரிதான கன்னங்களுள்ளதும்,
ஆமைக் கொப்பான முகம் உள்ளதும்,
நாய், மான், பன்றி, இவற்றிற்கு பலத்தை தரக்கூடியவனும்,
வாசனை திரவியங்கள் அடங்கிய இடத்தை அமைத்தவனும், ஆவான்.
சந்திரன் நாயகன்,
அலி கிரகம்
பலம் – பாதம்வரை