கன்னி.
1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்–
புஷ்பம் நிரம்பிய குடத்துடன்
அழுக்கடைந்த வஸ்திரத்தால் மறைக்கப்பட்ட சரீரமுடையவளாகவும்,
வஸ்திரம், தனம் இவற்றின் சேர்க்கையை விரும்புவளாகவும்
தந்தை வீட்டை விரும்புவளாகவும் உள்ளவள்.
புதன் நாயகன்
ஸ்திரீ கிரகம்
பலம், கழுத்து வரை.
10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திர«க்கானம் —
எழுதுகோலை தரித்த கருப்புநிறமுள்ள வஸ்திரத்தை
தலையில் சுற்றப்பட்டவனும்,
செலவு வரவு இரண்டையும் செய்கிறவனும்,
ரோமங்கள் அடர்ந்த சரீரமுடையவனும்
ஆயுதம் தரித்தவனும் ஆவான்.
சனி நாயகன்,
ஆண் கிரகம்
பலம் – தொப்புள் வரை
.
20 முதல் 30 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்
வெண்ணிறமுள்ளவளும்,
வெண் பட்டை தரித்தவளும்
மிக்க உயரம் உள்ளவளும்,
கும்பம், கரண்டி இவற்றை கைகளையுடையவளும்,
மனதடக்கம் உள்ளவளும்
கோயிலுக்கு போக நினைப்பவளும் ஆவாள்.
சுக்கிரன் நாயகன்
அலி கிரகம்
பலம், பாதம்வரை.