புண்ணியம் செய்தனமே மனமே, புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.
புதிய குவளை மலரைப் போன்ற திருவிழிகளை உடைய அபிராமியும்
அவளது கணவரும் இணைந்து நம்மை ஆட்கொள்ளும் காரணத்தால்
நாம் இருக்கும் இடத்தை அணுகி வந்து நம்மை தம் அடியார்களிடையே இருக்கும்படி
திருவருள் பாலித்து நம் தலையின் மேல் திருவடியை பதிக்க
உண்டான பெரும் புண்ணிய செயலை
முற்பிறவியில் செய்திருக்கிறோம்!
